சங்கர் முதல்முறையாக கடும் விமர்சனங்களை சந்தித்தது அந்த படத்தில் தான்.. மோசம் என முத்திரை குத்தப்பட்ட படம்

இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய கேரியரில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தன்னுடைய கேரியரே காலியாகும் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

நம்பித்தான் ஆகவேண்டும். 2003ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் இளம் ரசிகர்களை கவர்வதற்காக உருவான திரைப்படம் தான் பாய்ஸ். பாய்ஸ் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியே பல்வேறு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

ஷங்கர் படங்களில் இவ்வளவு அருவருப்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் கொந்தளித்து விட்டனர். மக்கள் மட்டுமல்ல பத்திரிக்கையாளர்களும் இந்த படத்தை படுமோசமாக விமர்சனம் செய்தனர்.

எப்போதுமே ஷங்கர் படங்களில் வசனங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதற்காக எப்போதுமே சுஜாதா என்ற எழுத்தாளர் பணியாற்றி வந்தார். ஆனால் அவரது நற்பெயரும் பாய்ஸ் படத்தால் கெட்டுவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

ஐந்து இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காதலிப்பது, அதில் ஒருவருக்கு அந்த பெண் ஓகே சொல்லி அவர்களுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு வாழ்வில் எப்படி முன்னேறுகிறார் என்பதை இளமை ததும்ப சொல்லியிருந்தார் சங்கர்.

அந்த படத்தில் நடித்த சித்தார்த், பரத், இசையமைப்பாளர் தமன், நகுல், ஜெனிலியா என எல்லாருமே தங்களுடைய கேரியரில் ஓரளவு சாதித்துவிட்டு தற்போது செட்டில் ஆகி விட்டனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணிகண்டன் என்பவர் இந்த படத்திற்கு பிறகு காணாமல் போனார்.

முதலில் தியேட்டரில் வெளியாகும்போது படம் படுகேவலமாக இருந்ததாகவும், பின்னர் பல காட்சிகள் மற்றும் வசனங்களை வெட்டிவிட்டு டிவியில் ஒளிபரப்பும் போது இந்த படம் வரவேற்பைப் பெற்றதாகவும் பரவலான கருத்துள்ளது.

boys
boys
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்