Connect with us

Cinemapettai

ரசிகர் கேட்ட ஒரே கேள்வி.. பிளாக் செய்த சங்கர்.. அது வேற ஞாபக படுத்திட்டிங்க, நெஞ்செல்லாம் புண்ணா கிடக்கு தம்பி

shankar-anniyan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர் கேட்ட ஒரே கேள்வி.. பிளாக் செய்த சங்கர்.. அது வேற ஞாபக படுத்திட்டிங்க, நெஞ்செல்லாம் புண்ணா கிடக்கு தம்பி

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நடிகர் நடிகைகளை நேரடியாக தொந்தரவு செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்களை பற்றிய மீம்ஸ் போட்டு அவர்களுக்கு டேக் செய்து விடுகிறார்கள்.

இதனால் நொந்து போய்க் கிடக்கும் நடிகர் நடிகைகள் சமூக வலைதளம் பக்கம் வருவதற்கே பயந்து கொண்டு இருக்கிறார்களாம். அந்த வகையில் தன்னைப்பற்றி மீம்ஸ் போட்ட ரசிகர் ஒருவர் பிளாக் செய்து விட்டாராம் இயக்குநர் ஷங்கர்.

அடிப்படையிலே அமைதியான குணம் கொண்டவர் தான் சங்கர் என பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். ஷங்கர் படத்தில் நடித்து பல நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் ஷங்கர் விக்ரம் கூட்டணியில் அந்நியன், ஐ என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

இதில் அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்திருப்பார் விக்ரம். இந்த படத்திலிருந்துதான் ரசிகர் ஒருவர் சங்கரை கலாய்த்து மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது, கோடி கோடியா வரி கட்டாமல் ஊழல் பண்ணிய நந்தினியை கொல்லாம விட்டுட்டீங்க, ஆனா பார்க்-ல அக்கடான்னு படுத்துகிடந்த சார்லி எதுக்கு சாகடிச்சிங்க என சங்கரை டேக் செய்து மீம்ஸ் போட்டுள்ளார்.

fan-tweet

fan-tweet

இதைப் பற்றி பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வர உடனடியாக அந்த மீம்ஸ் போட்ட நபரை பிளாக் செய்து விட்டாராம் சங்கர். அதற்கு அந்த ரசிகர், நான் உங்கள டேக் கூட செய்யலையே மாம்ஸ் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top