சங்கர் எப்போதுமே ஒரு படம் எடுத்தால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும். ஆனால் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க போவதாக அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முன்னதாக கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் பணியாற்றி வந்தார். நினைத்தபடி இந்தியன் 2 படப்பிடிப்புகள் சரியாக செல்லவில்லை. போதாக்குறைக்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதில் தயாரிப்பு தரப்புக்கும் சங்கருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது.
இதன் காரணமாக சங்கர் அந்த படத்திலிருந்து விலக தற்போது கமலஹாசனும் இந்தியன் 2 படத்தை கண்டு கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படியே இந்த பக்கம் சங்கர் தெலுங்கு, ஹிந்தி என கிளம்பிவிட்டார். அந்த வகையில் முதலில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்புகள் கூட சமீபத்தில் வெளியானது.
தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஷங்கரின் பழைய சூப்பர் ஹிட் படமான அந்நியன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஷங்கர்.

அந்நியன் இந்தி ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ரன்வீர் சிங். பார்க்க சாக்லேட் பாய் போல் இருக்கும் ரன்வீர் சிங் விக்ரம் போல் தன்னுடைய உடல் மொழியை மாற்றி நடிப்பதாக உள்ளது இப்போதே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
