ஷங்கர், முருகதாஸ் தொடர் தோல்விகளுக்கு காரணம் இதுதான்.. அப்ப இவ்வளவு நாளா சொந்த மூளையை யூஸ் பண்ணலையா?

ஷங்கர் முருகதாஸ் இருவருமே தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் கொடுத்திருந்தாலும் எல்லாமே வெற்றி படமாக கொடுத்தவர்கள். இதன் காரணமாகவே அவர்களை தலையில் தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக இவர்களது படங்கள் ரசிகர்களை மிகவும் சோதித்து வருகிறது. அப்படி அவர்களது படத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை பார்க்கலாம். ஒரு காலத்தில் பரபரப்பான திரைக்கதை, சுறுசுறுப்பான காட்சிகள் என ரசிகர்களை விறுவிறுப்பாக வைத்திருந்தவர்கள் தான் இருவரும்.

கடைசியாக சங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கிய படங்களின் திரைக்கதையில் அவ்வளவு பெரிய தொய்வு ஏற்பட்டு ரசிகர்களை எப்படா படம் முடியும் என யோசிக்க வைத்தது. அதிலும் சர்கார், 2. O, தர்பார் போன்ற படமெல்லாம் என்னடா இது என வாழ்க்கையையே வெறுக்க வைத்து விட்டது.

ar-murugadoss-cinemapettai
ar-murugadoss-cinemapettai

இவர்கள் தடுமாறுவதற்கு காரணம் நல்ல அசிஸ்டென்ட் டைரக்டர்கள் இல்லை என்பது தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். தற்போது முருகதாஸின் உதவி இயக்குனர்களான ஆனந்த் ஷங்கர், அஜய் ஞானமுத்து போன்ற ஒரு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக மாறிவிட்டனர்.

அதே போல் ஷங்கரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த அட்லீ, வசந்தபாலன் போன்றோர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரு படத்தின் கதை திரைக்கதை எழுதும்போது அனைவருமே தனித்தனியே தோன்றும் கற்பனைகளையும் காட்சிகளையும் சேர்த்து தான் ஒரு படம் உருவாகி வருகிறது.

shankar-cinemapettai
shankar-cinemapettai

அப்படிப் பார்க்கும்போது சங்கர் மற்றும் முருகதாஸ் போன்றோர் தங்களது உதவி இயக்குனர்களின் கற்பனைகளை மட்டுமே வைத்து படமெடுத்திருக்கிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேபோல் ஷங்கருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் சுஜாதா மறைந்தது அவரது பட வசனங்களில் அப்பட்டமாக தெரிய வருகிறது. தற்போது இருவருமே நல்ல உதவி இயக்குனர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லாமல் சொல்கிறது அவர்களது படங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்