பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் குருவுடன் வெளிவந்த புகைப்படம்.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர் மட்டும்தான்.

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதன் பிறகு இவர் இயக்கிய முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ ஆகிய படங்கள் இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிகராக நடித்துள்ளார். சிவாஜி, நண்பன் படங்களில் பாடல் காட்சியில் சிறிது வினாடிகள் மட்டுமே திரையில் வந்து செல்வார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் S.A.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இது எந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

shankar
shankar

ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து PAN இந்தியன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அப்படத்தை தொடர்ந்து அவர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேகை இயக்கவுள்ளார், இப்படமும் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இடையே லைகாவுடன் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் நின்றுபோன இந்தியன் 2, தற்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டதால், மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்