Connect with us
Cinemapettai

Cinemapettai

director-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரா இது.? 35 வருடங்களுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாமல் நடித்துள்ள வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. இவரது படங்கள் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இயங்குனர் சங்கர் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

சங்கர் படம் இயங்குவதை தாண்டி, எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்களில் பிரம்மாண்டம் மட்டுமின்றி அதிரடியான சமூக மாற்று கருத்துக்கள் என மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது.

குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற படங்கள் இவரது திறமைக்கு ஒரு பெரிய உதாரணம் ஆகும். இன்று இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சங்கர், இயக்குனராவதற்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

சங்கர் இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டடும் நிலையில், ரசிகர்கள் அவரது பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சீதா படத்தில் சங்கர் சிறு வேடத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் படத்தில் நடித்துள்ளது பலருக்கும் புதிய தகவலாக உள்ளது. எனவே இந்த வீடியோ அவரது ரசிகர்கள் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top