Rajini-2.0

லைக்கா தயாரிக்க வெகு பிரமாண்டமாக உருவாகி வரும் ஷங்கரின் 2.0 ல் எல்லாம் முடிந்துவிட்டது, இன்னும் கொஞ்சம் பேட்ச் வொர்க், ஒரு பாட்டு தான் மிச்சம் என்று ஷங்கர் தெரிவித்து இருந்தார்.

எமி ஜாக்சனும் மார்ச் 5 ம் தேதியே தன் போர்ஷன் 2.0 ல் முடிந்துவிட்டது என்றார். அப்போ, அந்த ஒரு பாட்டு காம்பினேஷன் இப்போது இல்லை என்று மட்டும் தெரிந்து விட்டது .

அந்த மிச்சத்தை எப்போதான் எடுக்கப்போகிறார் ஷங்கர் என்பதற்கு இப்போது தகவல் தெரிந்துள்ளது. அவர் இந்த மாதத்திற்குள்ளே அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள் ஷூட்டிங்கை முடித்து விட்டு, ரஜினிகாந்தை ப்ரீயாக விடப்போகிறார்.

கடைசி செட்யூல் ஹைதராபாத்தில் என்று பிளான் பண்ணியுள்ளார் ஷங்கர்.

ஏனென்றால், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஏப்ரல் 14 -ல் தொடங்கப்போகிறது. அதற்குள் ரஜினியை ப்ரீ பண்ணவேண்டும் என்று ஷங்கர் திட்டம்.

அது மட்டும் இல்லாமல், தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவேண்டும், அதற்கு வேலைகள் நிறைய இருக்கின்றன என்பதும் ஒரு காரணம்.