Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

வைரலாகுது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷேன் CSK வாட்சன் பதிவிட்ட வீடியோ.

ஐபில் பைனல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனி ஒருவனாக டீம்மை ஜெயிக்க முயற்சி செய்தார் வாட்சன்.

சீசன் துவக்கத்தில் இருந்தே வாட்சன் 100 சதவிகிதம் பிட் கிடையாது, பந்துவீசாமல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடினார். மேட்ச் சமயத்தில் அடிபட்டு காலில் ரத்தம் வந்த நிலையிலும் பைனலில் தொடர்ந்து ஆடினார் வாட்சன். மேட்ச் முடிந்த பின் தான் 6 தையல்கள் போட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக இந்த விஷயம் வெளியானது. அதன் பின் பலரும் இவரின் கமிட்மென்ட் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் பற்றி தான் பேசி வருகின்றனர்.

நாடும் திரும்பும் சமயத்தில் வாட்சன் சிரமத்துடன் நடக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மேலும் கலங்கடித்தது. நம்ம தண்டையார் பேட்டை தொடங்கி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா வரை ரசிகர்கள் இவரின் உடல் நலம் பாட்டரியே கவலைப்பட்ட சூழல் ஆனது.

இந்நிலையில் மனிதர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஹாய், கடந்த சில நாள்களாக நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியில் அருகே சென்றும் வெற்றிபெற முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், அது ஓர் அற்புதமான இறுதி ஆட்டம். மீதம் இருக்கும் அந்த ஒரு அடியையும் எடுத்துவைக்க அடுத்த வருடம் மீண்டும் வருவேன். உங்களின் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. விசில் போடுங்க..“ என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top