Sports | விளையாட்டு
காலில் ரத்தம் வந்த நிலையிலும் பைனலில் தொடர்ந்து ஆடிய வாட்சன். மேட்ச் முடிந்த பின் 6 தையல்கள்.. என்னய்யா சொல்றீங்க
நான் வாட்சன் சதவிகிதம் பிட் கிடையாது என்று கூட தோனி கூறினார்.

ஐபில் பைனல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனி ஒருவனாக டீம்மை ஜெயிக்க முயற்சி செய்தார் வாட்சன்.
முன்பே கூட நான் வாட்சன் சதவிகிதம் பிட் கிடையாது என்று கூட தோனி கூறினார். வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே அவர் ஆடியும் வந்தார். பல நேரங்களில் ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை, ஏன் இவரை நிர்வாகம் டீம்மில் வைத்துள்ளது என்று கூட கேட்டனர்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக இந்த விஷயம் வெளியாகி உள்ளது.

csk
“நேற்றைய போட்டியின்போது, வாட்சன் ரன் ஓடும்போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசிவரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
நேரலையில் மேட்ச் பார்த்த யாருமே இதை கவனிக்கவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை .
