Connect with us

Cinemapettai

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ! ஐபில் 2018 .

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே ! ஐபில் 2018 .

ஐபில் 2018

ஐபில் திருவிழா துவங்க சில மாதங்களே உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.

ipl

முதலில் அணிகள் வீரர்களை தக்கவைத்தனர், பின்னர் ஏலம் முடிந்தது. தற்பொழுது கோச்சிங், மற்றும் சப்போர்ட் ஸ்டாப் போன்றவர்களை தேர்வு செய்துவருகின்றன அணிகள்.

ஷேன் வார்னே

ஐபில் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, கோப்பையை வென்று கொடுத்தவர் ஷேன் வார்னே. ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் போன்றவர்களை வளர்த்துவிட்டவர். 2008-2011 வரை ராஜஸ்தான் அணிக்கு தலைமை வகித்த வார்னே, 52 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு, அந்த அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

தற்பொழுது சிறிய இடைவெளிக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக (மென்டர்) ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதணை அவரே தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

“ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஆலோசகராக திரும்பியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top