ஷாப்பிங் செய்யப்போய் ஷாக்கான ரோஜா சீரியல் ஷாமிலி.. சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட் ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய போய் ஷாக்காகி உள்ளார் ஷாமிலி சுகுமார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருவது தான் சரவணா ஸ்டோர்ஸ். தமிழகத்தில் தி நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

எங்கும் கிடைக்காத அளவிற்கு விதவிதமான டிசைன்களுடன் வைர நகைகள் அனைத்து தர மக்களும் வாங்கும் விலையில் இருந்து தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக வைர மோதிரம், மூக்குத்தி போன்றவைகள் சில ஆயிரங்கள் இருந்தாலே வாங்கும் அளவிற்கு நிறைய கலெக்ஷன்கள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த கடையில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை நடிகையான ஷாம்லி சுகுமார் ஷாப்பிங் செய்துள்ளார். இவர் தமிழ் சின்னத்திரையில் சித்தி, வம்சம், ரோஜா என கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும் பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட் ஸ்டோரில் விருப்பப்பட்ட நகைகளை வாங்கியுள்ளார். இதுகுறித்து ஷாமிலி சுகுமார் நான் இந்த மாதிரி கலெக்ஷனை இதுவரைக்கும் எங்கேயுமே பார்த்தது கிடையாது. ரொம்ப கம்மியான விலையில் இருந்தே வைர நகைகள் கிடைப்பது ரொம்ப ரொம்ப அரிது.

ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ் கடையில் எல்லாருமே வாங்கும் அளவிற்கு வைர நகைகள் குறைந்த விலையில் இருந்து கிடைக்கிறது என கூறியுள்ளார். அதாவது கம்மல் வெறும் ரூபாய் மூன்று ஆயிரத்தில் இருந்து கிடைக்கிறது என்பதை கேட்டு ஷாக்காகி உள்ளார்.

மேலும் தன்னுடைய கணவரின் பிறந்த நாளுக்காக கிஃப்ட் கொடுக்க தான் இங்கு ஷாப்பிங் வந்துள்ளதாக கூறியுள்ளார். வைரத்தில் பெல்ட், கோட் பட்டன் உள்ளிட்டவைகளும் இந்தக் கடையில் கிடைப்பதை பார்த்து வியந்துள்ளார்.

இவர் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குறைந்த விலையில் வைர நகைகள் கிடைக்கிறதா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்