9 வருடங்கள் கழித்து தெலுங்கு திரையுலகின் மூலம் மீண்டும் ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிக்க வந்து இருக்கிறார்.

80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி. குழந்தையாகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் படங்களில் நடித்தவர் கோலிவுட்டின் ராக் ஸ்டாராக வலம் வந்தார். இவருக்கு ஷாம்லி என்ற தங்கை இருக்கிறார். அக்காவிற்கு சமமாக குழந்தையாக பல படங்களில் நடித்தவர் ஷாம்லி. மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி படம் தான் அவருக்கு சூப்பர் ட்ராக்கை கொடுத்தது. 1990ல் வெளியாகிய இப்படத்தின் கிரேஸ் இன்னமும் குறையவில்லை. இப்படத்திற்காக தேசிய விருது, தமிழகத்தின் மாநில விருதும் ஷாம்லிக்கு கொடுக்கப்பட்டது. இப்படத்தால் அவருக்கு படம் குவியலாகவே அமைந்தது. இதனால், கோலிவுட்டின் முன்னணி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். கடைசியாக, குழந்தை நட்சத்திரமாக அஜித், ஐஸ்வர்யா ராய் மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியாகிய கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் நடித்தார்.

ஆனால், ஷாலினிக்கு கிடைத்த முன்னணி நாயகி அந்தஸ்து மட்டும் ஷாம்லியால் தட்ட முடியாமல் போனது. 2009ம் வருடம் தெலுங்கில் அறிமுகமான ஷாம்லிக்கு அப்படம் சிறந்த அறிமுக நடிகைக்கான தெலுங்கு திரையுலக விருது கிடைத்தது. அதை தொடர்ந்து, தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக வீரசிவாஜி, மலையாளத்தில் வள்ளியம் தெட்டி புல்லியம் தேட்டி என்ற படத்தில் நடித்தார். எந்த படமும் அவருக்கு சரியான வாய்ப்புகளை பெற்று தரவில்லை. தான் அஜித்தின் மச்சினி என்ற போதிலும் அதை வைத்து வாய்ப்பு தேடவும் ஷாம்லி தயாராக இல்லை. ஷாலினி தன் தங்கையை திரையுலகில் ஜொலிக்க செய்ய பல முயற்சிகளை கையில் எடுத்தார். இருந்தும், ஷாம்லி, வீரசிவாஜி படத்திற்கு பிறகு எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், தெலுங்கில் ஒரு படத்தில் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘அம்மம்மா காரி இல்லு’ என்ற படத்தில் நாக சௌரியாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படமாவது அவருக்கு சிறந்த இடத்தை தருமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.