செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

கேவலமான வித்தையை இறக்கிய வெங்கட்பிரபு.. வாய்ப்பு தர மறுக்கும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய கவனத்தைப் பெறும் காரணம் நண்பர்களின் கதைக்களத்தை வைத்து இவர் அதிகமான படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு படம் என்றாலே காமெடி கலந்த படமாக இருக்கும் என இத்தனை நாள் பல ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால் மன்மதலீலை என்ற ஒரே ஒரு கிலிம்ஸ் வீடியோ மட்டும் வெளியிட்டு நான் சாதாரண இயக்குனர் கிடையாது என நிரூபித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் முத்த காட்சிகள் இருக்கும் இதுவரைக்கும் மேலோட்டமான முத்தக்காட்சியை வைத்து வந்த வெங்கட் பிரபு தற்போது எல்லை மீறி அதிக கவர்ச்சியுடன் முத்தக்காட்சியில் இடம்பெற்ற படி படத்தை இயக்கியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கண்டிப்பாக வெங்கட் பிரபு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி வெற்றிபெறுவார் என பலரும் கூறி வந்தனர். மேலும் ரஜினிகாந்தை வைத்து வெங்கட்பிரபு இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் மன்மத லீலை படத்தின் கிலிம்ஸ் வீடியோ ரஜினிகாந்த் பார்த்தால் கண்டிப்பாக இனிமேல் வெங்கட்பிரபு படத்தை இயக்கும் வாய்ப்பு தர மாட்டார் என தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி நடிகை உடன் நடனமாடி இருக்கலாம் ஆனால் தற்போது இவர் இருக்கும் அந்தஸ்தை பார்க்கும் போது இந்த மாதிரியான காட்சிகளில் கொஞ்சம் கூட நடிக்க மாட்டார் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.

இதனால் வெங்கட் பிரபு ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை மேலும் இனி வரும் காலங்களில் வெங்கட் பிரபுவும் மற்ற இயக்குனர்களை போல மசாலா கலந்த படங்களை எடுக்க ஆரம்பித்து விடுவார் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News