Videos | வீடியோக்கள்
சிங்கக்குட்டிக்கு பாலூட்டி வளர்க்கும் பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ
பெரும்பாலும் நடிகைகள் நாய்க்குட்டிகளை வளர்த்து அதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படமாகவோ வீடியோவாகவோ வெளியிட்டு வருவார்கள்.
ஆனால் பாலிவுட் நடிகைகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். பாலிவுட் பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் ஒரு பூங்காவில் சிங்கக்குட்டி ஒன்றுக்கு பாலூட்டி வளர்க்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி விட்டது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷாமா சிக்கந்தர்(shama sikander). டிவி நிகழ்சிகள் சின்னத்திரை சீரியல்கள் என படிப்படியாக சினிமா நடிகையாக முன்னேறியவர்.
தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கிளாமர் குயின் என்றால் அது ஷாமா ஸ்கந்தர் தானாம். குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு கவர்ச்சி புகைப்படங்களையாவது வெளியிட்டு விடுவாராம்.
ரசிகர்கள் மீது அவ்வளவு பாசம். ஷாமா சிக்கந்தர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரு பூங்காவில் சிங்கக்குட்டி ஒன்றுக்கு புட்டிபால் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி விட்டது.
சிங்கத்தை பார்த்தாலே தொடை நடுங்கி நிற்கும் பலருக்கு மத்தியில் தைரியமாக சிங்கக் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடுவது ரசிக்க வைத்துள்ளது.
