Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவுக்கு போட்டியாக மூக்குத்தி அம்மனாக மாறிய ஷாலு ஷம்மு.. அசிங்கமாய் திட்டும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு ஷம்மு. அதை தொடர்ந்து இவர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் ஷாலு ஷம்மு இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பிறகு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதன் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவினார் ஷாலு ஷம்மு. இதன் மூலம் பட வாய்ப்பைப் பெறலாம் என்று நினைத்த அவருக்கு, கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது.
இந்த நிலையில் ஷாலு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஷாலு ஷம்மு, திடீரென குடும்ப குத்துவிளக்காக மாறி போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்.
மேலும் அந்தப் புகைப்படத்தில் லட்சணமாக புடவை அணிந்து, மூக்குத்தி, பெரிய ஜிமிக்கி என ஹோம்லி தோற்றத்தில் மிக அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து இருப்பதோடு, அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஷாலு ஷம்மு.

shalu-cinemapettai
நயன்தாராவுக்கு போட்டியாக மூக்குத்தி அம்மன் வேடத்தில் இருக்கும் ஷாலு ஷம்முவை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரின் ஏகபோகமாக கமெண்ட்களையும் பெற்று வருகிறது.
