Connect with us
Cinemapettai

Cinemapettai

shalu-shamu-chitra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்ரா இறந்ததற்கு காரணம் இவர்தான்.. அடித்து கூறும் ஷாலு சாமு!

மக்கள் தொலைக்காட்சி மூலமாக அறிமுகமானவர் விஜே சித்ரா. இவர் மக்கள் தொலைக்காட்சி மட்டுமின்றி கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் மற்றும் சன் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளும் பணியாற்றியுள்ளார். இவர் நடிப்பில் சின்னத்திரையில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் பல நடிகர், நடிகைகள் நடித்தாலும் இவருக்கு மட்டுமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். அந்த அளவிற்கு இவரது நடிப்பை அவரது ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

என்னதான் பேரு, புகழ் கிடைத்தாலும் ஒரு நொடியில் வாழ்க்கையை மாற்றிவிட்டது இவரது தற்கொலை. சினிமா துறையில் தற்கொலை செய்து கொள்வது அண்மைக்காலமாக நடந்துகொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று விஜே சித்ரா அவரது நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு திரைப்பிரபலங்கள் ஆன குஷ்பு மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவரது நெருங்கிய தோழியான ஷாலு சாமு நீ இப்படி ஒரு முடிவை எடுப்பனு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும், மேலும் உன்னுடைய லைப் பார்ட்னரை பற்றி நான் சொல்லியும் நீ கேட்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

shalu shamu

shalu shamu

இந்த பதிவை பார்க்கும் பொழுது ஒருவேளை சித்ராவின் மரணத்திற்கு அவரது லைஃப் பார்ட்னர் காரணமாக இருப்பாரோ என விசாரித்தும் வருகின்றனர்.

Continue Reading
To Top