Connect with us
Cinemapettai

Cinemapettai

shalini-pandey

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது கூட அட்ஜஸ்ட் பண்ணலைனா எப்படி.. தல தெறித்து ஓடிய ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் ஷாலினி பாண்டே. தமிழில் ஜீவா ஜோடியாக கொரில்லா என்ற படத்தில் நடித்து தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் தற்போது தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி ஆகியோர் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 27 நாள்கள் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு ஹிந்தியில் பெரிய பட்ஜெட் படம் வந்தவுடன் அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இதனால் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஷாலினி பாண்டேவுக்கு பதிலாக அக்ஷர ஹாசனை ஒப்பந்தம் செய்தார். தற்போது படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடந்து வருகிறது. ஷாலினி பாண்டே ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தவுடன் அக்னி சிறகுகள் படப்பிடிப்பை மாற்றி வைத்துக் கொள்ளுமாறு கேட்டு இருக்கிறார்.

அதற்கு சிவா ஷூட்டிங் கஜகஸ்தானில் நடக்க இருப்பதால் தள்ளிவைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் படத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகி விட்டார். இதனால் தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுக்குமாறு தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பண மோசடி வழக்கில் கோர்ட்டில் புகார் கொடுத்திருப்பதாக சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார். வெளியூர் பொண்ணுங்கள நம்பாதீங்க என்று சொன்னா கேக்குறீங்களா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top