ரஜினியுடன் நடிக்க மறுத்த அஜித் மனைவி ஷாலினி.. மாஸ் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டாங்களே

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்கள் என எதிர்பார்த்த நடிகைகளில் ஒருவர் அஜீத் மனைவி ஷாலினி. இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமான வரவேற்பைப் பெற்ற சாலினி திடீரென அஜீத்தை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹீரோயினாகவும் பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றிநடை போட்டு வந்தார்.

அதிலும் விஜய் மற்றும் ஷாலினி ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இப்படி விறுவிறுவென முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் நேரத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார்.

அப்படி ஷாலினி தன்னுடைய கேரியரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் மிஸ் செய்துள்ளார். 1999 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் படையப்பா.

இந்த படத்தின் வெற்றியையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி மாளாது. பக்கா கமர்சியல் படமாக அமைந்த இந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை தான் ஷாலினி மிஸ் பண்ணியுள்ளார்.

shalini-missed-padayappa-movie
shalini-missed-padayappa-movie

அதுவும் ரஜினியின் தங்கை வேடம். நடிகை சித்தாரா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதல் முதலில் ஷாலினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க விரும்பிய ஷாலினி அந்த படத்தை வேண்டாம் என கூறி விட்டாராம்.

Next Story

- Advertisement -