தனக்கு கிடைத்த சூப்பர் ஹிட் 12 படங்களை தவற விட்ட பிக்பாஸ் நடிகர்.. இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் வெளியான சின்னதம்பி படம் பட்டிதொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி ரஜினியை வைத்து இவர் இயக்கிய சந்திரமுகி படம் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

இவரது மகனான நடிகர் சக்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழ் சினிமாவில் தொட்டால் பூ மலரும் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இயக்குனராக இவர் தந்தை வெற்றி பெற்ற அளவிற்கு ஒரு நடிகராக சக்தியால் வெற்றி பெற முடியவில்லை.

தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த பெயரை மொத்தமாக கெடுத்து கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சக்தி, “பிக் பாஸ் நிகழ்ச்சியால் எனக்கு இருந்த பெண் ரசிகைகள் பாதிபேரை இழந்து விட்டேன். மேலும் எனக்கு சுத்தமாக வாய்ப்புகள் வரவில்லை. முதலில் சார் என மரியாதையாக பேசியவர்கள் தற்போது எனக்கு மரியாதை கொடுப்பதில்லை” என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

இதுதவிர தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி கண்ட களவாணி, ஆயிரம் விளக்கு, தம்பிக்கோட்டை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட 12 நல்ல படங்களை தவற விட்டு விட்டதாக தற்போது புலம்பியுள்ளார். இப்போது புலம்பி என்ன பிரயோஜனம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்