முதல் படுக்கையை பகிர்ந்த உண்மையை சொன்ன ஷகிலா.. இன்றுவரை கல்யாணத்துக்கு மட்டும் “நோ” தான்

90களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஷகிலா. மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் முதன் முறையாக துணை நடிகராக அறிமுகமானார் ஆவார். விரசத்தை தூண்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி புகழின் உச்சத்தை அடைந்தவர் ஷகிலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தவர் அவர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களை விட அவரது படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கட்டி ஆண்டவர் அவர். ஒரு கட்டத்தில் மலையாள படம் என்றாலே அது  ஷகிலா படம் தான் என்று பேசக்கூடிய அளவிற்கு 100 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

பாலுணர்வைத் தூண்டும் படங்கள் மட்டுமின்றி குணச்சித்திர வேடம், நகைச்சுவை கதாப்பாத்திரம் என அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் அவர்.  இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம்  சின்னத்திரையிலும் பிரபலமானார் ஷகிலா, அப்போதுதான் அவரது இளகிய குணம், அவரின் அன்பான நடவடிக்கைகள் பலரையும் கவர்ந்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலமே அவர் மீதான கண்ணோட்டம் மாறியது, அவரின் உண்மை முகம் அறிந்த பலரும் நெகிழ்ந்து போயினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அவரது ரசிகர்களாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம். இந்நிலையில்தான் தனியார் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதில் எழுப்பப்பட்ட பல்வேறான ஏடாகூட கேள்விகளுக்கும் தயங்காமல் துணிச்சலாக பதிலளித்துள்ளார்.

கேள்விக்கு நடுவில் நெறியாளர் நீங்கள் நிறைய ஆபாசமான படங்களில் நடித்துள்ளீர்கள் உண்மையில் நீங்கள் வெர்ஜீனா.  இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா என கேட்டார். இந்த கேள்வி எந்த வித தயக்கமுமின்றி சிறிது சிரித்து விட்டு, “இல்லை நான் வெர்ஜீன் இல்லை. என்னுடைய இளமையில் நடந்த சம்பவம் அது என கூறினார். நெறியாளர் மீண்டும் அது யார் என கேட்க, ” அவர் என்னுடைய இளம் வயது நண்பர், அவர் பெயர் ரீச்சர்ட்” என பதிலளித்தார் நடிகை ஷகிலா.

கடந்த 2012ஆம் ஆண்டில் நான் இனிமேல் ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்திருந்திருந்த நடிகை ஷகிலா பின்னர் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாத இவர், மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கூறப்படாத இவரது வாழ்க்கையின் பக்கங்களில் நிறைய கஷ்டங்களை இவர் சந்தித்துள்ளதால் தான் இவரால் அனைவரிடமும் இனிமையாக பழக முடிகிறது என குக் வித் கோமாளியில் பங்குபெற்ற பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story

- Advertisement -