Sports | விளையாட்டு
பேசாம இருந்தது ஒரு குத்தமாடா.. புலம்பும் ஷாகிப் அல் ஹசன்
சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டங்கள் பெருகி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியிலும் சூதாட்டம் ஒரு காலத்தில் தலைவிரித்தாடியது. அதில் மாட்டிக் கொண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
அதேபோல் தற்போது பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஷாகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
ஷாகிப் அல் ஹசன்-ஐ சூதாட்டத்தில் ஈடுபட்ட பலர் முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவர் அதில் ஈடுபடவில்லை. மேலும் இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் சங்கத்திற்கு அவர் தெரியப்படுத்தவில்லை. அதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பங்களாதேஷ் அணிக்காக கிரிக்கெட் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் எந்தத் தப்பும் செய்யாத ஷாகிப் அல் ஹசன் மனம் நொந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குது.
