புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சூரி கன்னத்தை கிள்ளிய ஷகிலா.. பதிலுக்கு சூரி என்ன செய்தார் தெரியுமா?

கோலிவுட்டில் சினிமா படப்பிடிப்புகளுக்கு செட் போடும் நபராக தனது வேலையைத் தொடங்கிய நடிகர் சூரி, தற்போது மாபெரும் கதாநாயகனாக முன்னேறி பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

எல்லா சினிமாக்காரனுக்கும் ஒரே கதை தான் என்பதைப் போல மதுரையில் பிறந்து வளர்ந்த சூரிக்கும் சினிமா ஆசை துரத்தியது. இதனால், மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு வந்தார்.

ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போகாத அவர், சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். பின் சினிமா செட் போடும் தொழிலில் அஸிஸ்டெண்ட்டாக பணியாற்றினார். இதையடுத்து, இவர் முதன்முதலாக நடிகர் மம்முட்டியின் மறுமலர்ச்சி படத்தில் தான் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பின் அவர் எவ்வளவு முயன்றும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சினிமா படப்பிடிப்பின் போது, இயக்குநர் சுசீந்திரனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், 50 பரோட்டாவை சாப்பிடுவதாகக் கூறி பந்தயத்தில் இறங்கும் சூரி, எல்லாக் கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன் எனக் கூறும் போது மக்களின் கவனத்தை பெறுகிறார்.

சூரிக்கு சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் முன்னேற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து படிப்படியாக விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில் தான், சூரிக்குள் ஒளிந்திருக்கும் கதாநாயகனை கண்டெடுத்தார் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தனது இயக்கத்தில் உருவான விடுதலை படத்திற்கு கதாநாயகனாக சூரியை தேர்ந்தெடுத்தார். அத்தோடு நில்லாது, இத்தனை நாள் வெறும் காமெடி நடிகனாக அறியப்பட்ட சூரி, வெற்றிமாறனின் கைவண்ணத்தில் சிக்ஸ் பேக் சூரியாக மாறினார்

இதனிடையே தான், நடிகை ஷகிலா சூரியின் வளர்ச்சியை பார்த்து வியந்து பாராட்டி அவருக்கு அறிவுரை அளித்துள்ளார். நடிகர் சூரியை சந்தித்த ஷகிலா, அவரின் கன்னத்தை கிள்ளி பாரட்டு தெரிவித்தார். அத்தோடு நில்லாமல், சூரி மேல் விழுந்திருக்கும் திருஷ்டிகளை கழிக்கவும் செய்தார். சூரிக்கு இது அலாதி மகிழ்ச்சியை கொடுத்தது. பதிலுக்கு அவர் குழந்தை சிரிப்போடு ஷகீலாவுக்கு நன்றி சொல்லி, ஒரு செல்பி எடுத்து கும்பிடு போட்டு உள்ளார்.

- Advertisement -

Trending News