fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிளுகிளுப்பாக வெளியான ஷகிலா பட ட்ரைலர்.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ

shakeela

Videos | வீடியோக்கள்

கிளுகிளுப்பாக வெளியான ஷகிலா பட ட்ரைலர்.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ

மலையாள சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகை ஷகிலா. ஷகிலா மற்றும் அவரது குழுவினர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் செம வரவேற்பு பெறும்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும். வெளியாகும் அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக் குவிக்கும்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட அதிக அளவு வசூல் செய்து பிரமிக்க வைத்தார் ஷகீலா.

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி படமாக்கியுள்ளனர். ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடித்துள்ளார்.

முன்னதாக ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது ஷகிலா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கிளுகிளுப்பூட்டி உள்ளது.

வெறும் ரொமான்சை மட்டும் மையப்படுத்தி எடுக்காமல் ஷகிலாவின் வாழ்க்கையில் நடந்த கொடுமைகளையும் இந்த படம் தோலுரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top