ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை ?

shakeelaதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த பிரபல நடிகை ஷகிலா, தற்போது தனது சொந்த வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார்.

இதுகுறித்து ஷகிலா ஒரு பேட்டியில் கூறியபோது, ‘எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்னிடம் அனுமதி கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன். என் சினிமா அனுபவங்கள், சொந்த வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகள் ஆகியவை இந்த படத்தில் இருக்கும். என்னுடைய கேரக்டரில் நான் நடிக்கவில்லை. எனது கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகைகள் சன்னிலியோன், பிபாசாபாசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மலையாளத்தில் நான் நடித்த போது நிறைய சம்பாதித்தேன். ரூ.4 கோடியில் தயாரான மம்முட்டி படத்தை விட என்னை வைத்து ரூ.15 லட்சம் செலவில் எடுக்கும் படங்கள் அதிகம் வசூலித்து சக்கைபோடு போட்டன. இதனால் எனக்கு எதிராக சதி செய்து அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள்.

சினிமாவில் நடித்து நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஏமாற்றி பறித்து விட்டார். திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Comments

comments