fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாலிவுட் நடிகை நடித்துள்ள ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. ரிலீஸ் தேதியுடன் இணையத்தை கலக்கும் போஸ்டர்!

shakeela

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகை நடித்துள்ள ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. ரிலீஸ் தேதியுடன் இணையத்தை கலக்கும் போஸ்டர்!

ஒரு காலத்தில் இந்திய சினிமாவையே தன்னுடைய கையில் வைத்திருந்த சகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகை ஷகிலா. ஷகிலா மற்றும் அவரது குழுவினர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் செம வரவேற்பு பெறும்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும். வெளியாகும் அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக் குவிக்கும்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட அதிக அளவு வசூல் செய்து பிரமிக்க வைத்தார் ஷகீலா.

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி படமாக்கியுள்ளனர். ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடித்துள்ளார்.

shakeela-movie

shakeela-movie

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருந்த ஷகிலா படம் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக உள்ளதாம்.

shakeela

shakeela

ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top