சினிமா துறையில் சாதித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே ஆனால் அவர்கள் அத்துறையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும்.

ஆபாசப்படங்களில் நடிப்பதற்கும், அதை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் எனவே, தனி கூட்டம் இருக்கிறது. இந்த துறையில் நுழைந்து தனக்கான ரசிகர்களை பெரிதாக ஈர்த்தவர்கள் வெகு சிலரை. அவர்களில் ஒருவர் ஷகீலா. யாருமே எந்த தவறியும், தவறான வழிகளில் வேண்டும் என்றே செல்வதில்லை. அவரது வாழ்க்கை சூழல், குடும்ப நெருக்கடி, வேறு வழியின்மை, பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவர்களை தள்ளுகின்றன.

அந்த வகையில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நடிகை ஷகீலா எவ்வாறு இந்த துறையில் நுழைந்தார், யாரால் ஆபாசப்பட உலகிற்குள் தள்ளப்பட்டார் என, நடிகை ஷகீலா தனது வாழ்வில் கடந்து வந்த ரணமான பாதை.

பள்ளி தோழி!

நான்காம் வகுப்பு படிக்கும் போதே, இவர் உடன் படித்த தோழி சினிமாவில் நடித்து பிரபலாமானார். அப்போது இவரது பள்ளியில் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடைப்பெறுமாம். அப்போது அங்கே வரும் நட்சத்திரங்கள் அவரது தோழியுடன் கொஞ்சி பேசுவதை கண்டு. அந்த சிறு வயதிலேயே தானும் இப்படி ஒரு பிரபலமானவராக திகழ வேண்டும் என ஆசை கொண்டுள்ளார் ஷகீலா.

பள்ளி படிப்பில் தோல்வி

“எனக்கு படிப்பு சிறு வயதில் இருந்து பெரிதாக ஏறவில்லை. மிகவும் சுமாராக தான் படிப்பேன். பத்தாவது தேர்வில் ஃபெயில் ஆனதால், அப்பா என்னை வயது வந்த பெண் என்றும் பாராமல், வீட்டு வெளியே வைத்து அடித்தார்.” என ஷகீலா கூறியிருக்கிறார்.

மேக்-மேன் செய்த உதவி!

அப்போது பிரபலமாக இருந்த மேக்கப் மேன் ஒருவர், ஷகீலா வீட்டின் எதிரே தான் இருந்து வந்துள்ளார். இவரது அப்பா, ஃபெயில் ஆனதால் அடிப்பதை கண்டு, ஏன் வயது வந்த பெண்ணை அடிக்கிறாய். அவளுக்கு தான் படிப்பு வரவில்லையே, நடிக்க அனுப்பு என கூறியுள்ளார். அப்படி தான் நடிக்கும் வாய்ப்பு ஷகீலாவிற்கு கிடைத்துள்ளது.

முதல் படமே சில்க் தங்கை வேடம்!

தான் நடித்த முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாக நடித்துள்ளார் ஷகீலா. சில்க் ஸ்மிதா வாழ்க்கை என எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் அவரது உண்மையான வாழ்க்கையே கிடையாது. அவரை நான் நன்கு அறிவேன், இந்தியில் வியாபாரம் செய்ய கதையை மாற்றிவிட்டனர் என ஷகீல கூறியுள்ளார்.

ஷகீலாவை ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா!

முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காட்சியில் ஷகீலாவை ஓங்கி அறைய வேண்டும். காட்சி எடுக்கும் போது நிஜமாகவே ஓங்கி அறைந்து, ஷகீலாவை அழவைத்துள்ளார் சில்க். பிறகு தனிமையில் அழைத்து, இந்த காட்சியில் நீ டவல் மட்டுமே அணிந்து நடிக்க வேண்டியதாக இருந்தது. நான் பொய்யாக அடித்து நீ சரியாக அழாமல் போனால், இதே உடையில் நீ நாள் முழுக்க நடிக்க வேண்டி இருக்கும். அதனால் தான் நிஜமாகவே அடித்தேன் என கூறு, ஆறுதல் கூறி சென்றாராம்.

அப்பா மரணம்!

சிறிது காலத்தில் அப்பா மரணம் அடையவே, குடும்ப பாரத்தை தான் சுமக்க வேண்டய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஷகீலா. ஒரு காலத்தில் ஆபாசப்படங்கள், கவர்ச்சி தோற்றங்களே வர, ஷகீலா அதில் நடிக்க மறுத்துள்ளார். பிறகு, அவரது குடும்பத்தார், நீ இப்படியே வாய்ப்புகளை தட்டிக் கழித்தால், நாம் நடுத்தெருவுக்கு தான் வர வேண்டும் என கூற… அதிர்ச்சியில் வேறு வழியின்றி, ஆபாசப் படங்கள், கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கினாராம் ஷகீலா.

சகோதரி துரோகம்!

தான் ஆரம்பக் காலத்தில் சம்பாதித்த பணத்தை தனது சகோதரியிடம் தான் கொடுத்து வைத்திருந்ததாகவும். அதை அவர் ஏமாற்றி விட்டார். இன்றளவும் எங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என நடிகை ஷகீலா கூறியுள்ளார்.

ஆண் துணை அவசியம்!

பெண்ணுக்கு எப்போதுமே ஒரு ஆணின் துணை அவசியம். கணவர், பிள்ளைகள் உறவுகள் இல்லாமல் பெண் இந்த சமூகத்தில் வாழ்வது கடினம் என ஷகீலா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சுயசரிதை!

தான் எழுதிய சுயசரிதையில் தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், தான் கடந்து வந்த பாதைகள், தான் கண்ட ஏமாற்றங்கள், கசப்பான பக்கங்கள் என அனைத்தையும் எழுதியுள்ளார் நடிகை ஷகீலா.