ரவி அப்புலு.

2001 ஆம் ஆண்டு விஜய், ரிச்சா பலோட் , விவேக், கோவை சரளா, தாடி பாலாஜி   நடிப்பில் வெளிவந்த படம் “ஷாஜகான்”. அடுத்தவர்களின் காதலுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் விஜய் அவர்களுடையது. விஜய் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற படம்.

மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். பிரசன்ன குமார் வசனங்கள் எழுத இப்படத்தை இயக்கியவர் ரவி. இவர் தான் தற்பொழுது மீண்டும் படம் இயக்குகிறார்.

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் மற்றும்  திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் இணைந்து  தயாரிக்கும் முதல் படம் “செயல்”. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி  நடிக்கிறார் கள். மேலும் இவர்களுடன் முனிஸ்காந்த், ஜெயபாலன், வினோதினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசை சித்தார்த் விபின் . ஒளிப்பதிவு   வி.இளையராஜா. ஸ்டன்ட் கன்னல் கண்ணன்.  நடன அமைப்பு  – பாபா பாஸ்கர் மற்றும்  ஜானி.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு இப்படம் பற்றி ரவி அளித்த பேட்டியின் தொகுப்பு “வட சென்னையின்  தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் பிரபல ரௌடியை, அங்கு  வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது. இதனால் மார்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அசிங்கப்படும் நிலை. இதற்கு அந்த ரௌடி பழிவாங்க எடுக்கும் நடவடிக்கை தான் மீதி கதை. ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் விதமாக படமாக்கியுள்ளோம். இப்படத்தில் காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும்  தன் காதலை கதாநாயகனிடம் சொல்ல வரும் பொழுதெல்லாம்  அவர் செய்யக்கூடிய விஷயங்கள் அனைவரையும் கவரும். ” என்றார்.