Shaitaan X Review- ஜோதிகாவை கொலை நடுங்க வைத்த சைத்தான்.. லவ்வர் பாய் மேடியா இது? மிரளவிடும் எக்ஸ் விமர்சனம்

Shaitaan X Review : விகாஸ் பஹல் இயக்கத்தில் அஜய் தேவகன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் பாலிவுட்டில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் சைத்தான். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருந்தது. அந்த அளவுக்கு படும் பயங்கரமாக இருந்த இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதன்படி இன்று படம் வெளியான நிலையில் ரசிகர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். சந்திரமுகி படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஜோதிகா இந்த படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் கொலை நடுங்க செய்து இருக்கிறார். கண்டிப்பாக சைத்தான் பிளாக்பஸ்டர் ஹிட்.

shaitaan-review
shaitaan-review

இந்தப் படத்திற்கு பலம் திரைக்கதை. அதேபோல் சரியான நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் பக்காவாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சைத்தான் மிகவும் த்ரில்லரான அனுபவத்தை கொடுத்துள்ளது. மேலும் பிஜிஎம் அட்டகாசம், எதிர்பாராத திருப்பம் மற்றும் ட்விஸ்ட் படத்தை இன்னும் மெருகேற்றி உள்ளது.

shaitaan-review
shaitaan-review

Also Read : டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய ஜோதிகா.. 45 வயதில் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

மேலும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சைத்தான் படம் படு பயங்கரமாக இருப்பதாக தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒரு அமானுஷ்ய வகை திரைப்படம். கணிக்க முடியாத திருப்பங்கள் ஒவ்வொரு நடிகர்களின் பவர் பேக் செய்யப்பட்ட நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

shaitaan-review (1)
shaitaan-review

மாதவன் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த கதாபாத்திரத்தை கையாண்டு உள்ளார். அதேபோல் தந்தை கதாபாத்திரத்திற்கு அஜய் தேவகன் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஜோதிகாவும் அம்மாவாக சிறப்பாக நடித்து இருக்கிறார். இவர்களது மகளாக ஜாங்கிபோடிவாலா படத்தின் ஆன்மாவாக இருக்கிறார். மொத்தத்தில் சைத்தான் படம் திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்குக்கான படம்.

shaitaan-review
shaitaan-review

Also Read : பித்து பிடித்த குணா, ஒரே படத்தோடு காணாமல் போன அபிராமி.. ஜோதிகா, நக்மாவின் உறவா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்