ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். தற்போது லக்னோவில் ஷூட்டிங் நடைபெற்று வரும் இந்தப் படத்தில், ஷாருக் குள்ள மனிதனாக நடித்து வருவதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

இன்னும் 4 ஷெட்யூல் மற்றும் பேட்ச் ஒர்க் பாக்கியுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறதாம்.
எனவே, அடுத்த வருட (2018) இறுதியில்தான் இந்தப் படம் ரிலீஸாகும் என்று சொல்லிவிட்டனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஷாருக் ரசிகர்கள்.

ஆனால், இடையில் வெளியாகும் சில படங்களில், சிறப்புத் தோற்றத்தில் ஷாருக் நடிப்பார் என்பதால், ரசிகர்கள் கொஞ்சம் மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.

ஆனந்த் எல் ராய் படத்தில், ஷாருக் ஜோடியாக கத்ரினா கைஃப் மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். புத்தாண்டுக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் எனத் தெரிகிறது.