கபாலியை பார்த்து மிரண்டுபோன ஷாருக்கான் – என்ன நடந்தது?
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.
ஆனால் அதற்கு முன்பாகவே இப்படத்தின் ப்ரொமோஷன் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை கவனித்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், எப்படி இது நமக்கு சாத்தியம் ஆகாமல் போனது? என தனது மார்கெட்டிங் டீமிடம் கடிந்துக்கொண்டாராம். இதை சமீபத்திய பேட்டியில் தாணு வெளிப்படையாக கூறியுள்ளார்.
