Connect with us
boomerang-movie

புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்.. கோபத்தில் தொகுப்பாளரை விளாசியதால் பரபரப்பு!!

shahruk khan

News | செய்திகள்

புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்.. கோபத்தில் தொகுப்பாளரை விளாசியதால் பரபரப்பு!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாய் சென்றிருந்தார். அங்கு எம்பிசியின் ரமேஸ் அண்டர்கிரவுண்ட் (அரபி டிவி நிகழ்ச்சி) க்கு அழைக்கப்பட்டிருந்தார்.இது பிரபலமான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்களுக்கு சங்கடனாம குறும்புதனமான நிகழ்வு நடைபெறும்.

ஷாருகான் பேட்டி கொடுக்க டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷானுடன் பாலைவனப் பகுதியில் சென்றார். டிரைவர் வழி தவறி சென்று அவர்களின் கார் புதை மணலில் சிக்கியது. கார் புதை மணலில் மூழ்கியது. ஷாருக்கான் அமைதியாக இருக்க முயன்றார். ஆனால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷான் பயத்தில் அலறினார். அந்த நேரம் பார்த்து கொமோடோ டிராகன் அவர்களை நோக்கி வந்தது.

கொமோடோ டிராகன் ஷாருக்கான் மற்றும் நிசானை நோக்கி வந்தது. நிசான் பயத்தால் அலறினார். ஷாருக்கோ மணலை அள்ளி டிராகன் மீது வீசினார். டிராகன் பக்கத்தில் வந்தபோது அதற்குள் இருந்து எகிப்தை சேர்ந்த காமெடி நடிகரும், ரமீஸ் அன்டர்கிரவுண்ட் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரமீஸ் வெளியே வந்தார். டிராகன் பொம்மைக்குள் இருந்தது ரமீஸ்.

ஆனால் அது பொம்மை போன்றே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டு குறும்புதனமாக எடுக்கபட்டாதாகும்.

ரமீஸை பார்த்ததும் ஷாருக்கான் இது எல்லாம் ஒரு விளையாட்டா, இதற்கு தான் நான் இந்தியாவில் இருந்து வந்தேனா என்று கேட்டு கோபத்தில் கொந்தளித்தார். மணலில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ரமீஸை தரையில் தள்ளி முகத்தில் ஓங்கு குத்தப் பார்த்தார்.

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ஷாருக்கான் என்று ரமீஸ் மீண்டும் மீண்டும் கூறினார். ஷாருக்கானுக்கு ரமீஸ் பேசப் பேச கோபம் அதிகமாகி அவரை தரையில் தள்ள தரதரவென இழுத்துச் சென்றார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top