Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஹ்மான் பாட ஷாருக்கான் ஆட.. இணைகிறது மாபெரும் கூட்டணி.. ஆனா சினிமா இல்லை
Published on
வரும் நவம்பர் 28ஆம் தேதி ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிசாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி நவம்பர் 28 இல் தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியின் தீம் பாடலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அதற்கு ஷாருக்கான் நடனமாட உள்ளார்.
முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இப்பாடல் வரிகள் ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா என்று தொடங்கும் இதற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சூட்டிங் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷாருக்கான் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இப்பொழுது இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படுவது தமிழனாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
