மிருகத்தனமாக வெளிவந்த ஷாருக்கான் பட டைட்டில் வீடியோ.. பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த அட்லீ

தமிழ் சினிமாவில் வந்த புதிதிலேயே தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றி கொடுத்த பெருமை சேர்த்துள்ளார் அட்லீ. இந்நிலையில் பாலிவுட்டிலும் அட்லீ தன்னுடைய முத்திரையை பதிக்க உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து அட்லீ கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் சில பிரச்சனையில் இருந்ததால் ஷாருக்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற தமிழ் சினிமா நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கிறார் நயன்தாரா. மேலும் ஷாருக்கான் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் டைட்டில் லயன் என கூறப்பட்டது. தற்போது இப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பு ஒரு வீடியோ உடன் வெளியாகியுள்ளது. அதாவது ஷாருக்கான் முகத்தை மறைத்தபடி கையில் துப்பாக்கியுடன் அந்த வீடியோவில் உள்ளார். மேலும் இப்படத்தின் டைட்டில் ஜவான் என வைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 25 டைட்டில்களிலிருந்து ஜவான் என்ற டைட்டிலை ஷாருக்கான் மற்றும் அட்லி தேர்ந்தெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜவான் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் டைட்டில் வெளியானதால் அட்லி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அட்லி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். இதைத்தொடர்ந்து இப்படத்திற்கான அடுத்த அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றன.