ஷாருக்கான், அட்லி கூட்டணிக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா.? வாயைப் பிளந்து பார்க்கும் கோலிவுட் வட்டாரம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அட்லி ராஜாராணி படத்தின் மூலம் அறிமுகமானார் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி எனும் படத்தை இயக்குவதற்கு விஜய் வாய்ப்பளித்தார். இதில் இவர்களது கூட்டணி வெற்றி பெற அடுத்ததாக மெர்சல் படத்தில் இணைந்து பணியாற்றினர் அதுவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பிறகு பிகில் படத்திலும் இணைந்து பணியாற்றி வசூலை வாரி குவித்தனர்.

அதன்பிறகு தற்போது அட்லி அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்காக 2 வருடமாக கதைகளை உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கதையை கூறி ஷாருக்கான்னிடம் பாராட்டைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

atlee-shahrukhkhan-cinemapettai
atlee-shahrukhkhan-cinemapettai

ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அட்லீயின் படத்தில் நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்திற்காக அட்லீ பல்வேறு விதமான சண்டை காட்சியில் உருவாக்குவதால் கோடிக்கணக்கில் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அட்லி படத்தின் பட்ஜெட் 200 கோடி என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தளபதியுடன் பிகில் படத்தில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படமும் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டால் அட்லியின் அந்தஸ்து எங்கேயோ போய்விடும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்