தோனி சினிமா நடிகராகவும், ஷாருக்கான் கிரிக்கெட் வீரராகவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பது குறித்த காமெடி விளம்பரப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த விளம்பரம் கடந்த 2007-ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டது. இந்த விளம்பரத்தில் ஷாருக்கான், தோனி இருவரும் சகோதரர்கள். ஆதரவற்றவர்களாக இருக்கும் இருவரில், தோனியை சினிமா குடும்பம் ஒன்றும், ஷாருக்கானை கிரிக்கெட் குடும்பம் ஒன்றும் தத்தெடுத்துக் கொள்கிறது.

இருவரும் வளர்ந்து தோனி நடிகராகவும், ஷாருக்கான் பிரபல கிரிக்கெட் வீரராகவும் உருவாகிறார்கள். பின்னர் இருவரும் இணைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடிக்கும் போது, அவர்களின் கழுத்தில் இருக்கும் “வி” என்ற டாலர் மூலம் தாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் என தெரிய வருகிறது. அத்துடன் விளம்பரப்படம் முடிகிறது.

முழுக்க, முழுக்க காமெடியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.