டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மார்க் ஷீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் பாட்ஷாவாக புகழ்பெற்ற ஷாருக்கான் படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர் தான் என சமூக வலைத்தள பயனர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். இந்தியாவை அடையாளப்படுத்தி பல்வேறு சர்வதேச புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றும் ஷாருக்கான் பள்ளிப்படிப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் ஹான்ஸ் ராஜ் கல்லூரியில் சேருவதற்காக நடிகர் ஷாருக்கான் சமர்ப்பித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை, டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கி வரும் ‘டியூ டைம்ஸ்’ எனும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது நடிகர் ஷாருக்கானின் மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் மற்ற பாடப்பிரிவுகளை விட ஆங்கிலத்தில் 51/100 என குறைவான மதிப்பெண்களே எடுத்துள்ளார். ஆங்கில பேச்சில் புலமையான அவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.