சொகுசு கப்பல், போதைப்பொருள், ஆபாச நடனங்கள்.. ஷாருக்கானின் மகனை அலேக்கா தூக்கிய போலிஸ்

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் முன்னணி நடிகர்தான் நடிகர் ஷாருக்கான் இவருடைய மகன் ஆரியன்கான், தற்போது போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மும்பையில் இருந்து கோவா வரை செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து அளிக்கப்படுவதாக போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், மும்பையை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை இயக்குனரான சமீர் வான்கடே அவர்களின் தலைமையில் பயணிகள் போல் அந்த சொகுசு கப்பலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு சில போதை தடுப்பு போலீஸ் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த கப்பலானது கார்டெலியா குருசஸ் என்கின்ற ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலாகும்.

அந்த சொகுசு கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில், சுற்றி கடல்நீர் மட்டுமே சூழ்ந்துள்ள நிலையில், பார்ட்டி தொடங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற குதூகலமான பார்ட்டியின் போது அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அதிரடியாக போதை தடுப்புப் பிரிவினர் தங்களின் ரைடினை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர்.

அந்த அதிரடி சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட கொகைன், எம்.டி.எம்.ஏ மற்றும் ஹஷிஸ் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்பட்டதை போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பார்ட்டிக்காக மட்டும் ஒவ்வொரு நபரும் 60 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Shah-Rukh-Khan-son-cinemapettai
Shah-Rukh-Khan-son-cinemapettai

இந்த அதிரடி சோதனையின் போது இரண்டு பெண்கள் மற்றும் 6 ஆண்கள் ஆக மொத்தம் எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக போதை தடுப்புப் பிரிவினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று நபர்களுக்கு என்சிபியால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனையின் முடிவில் போதைப்பொருள் உபயோகித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரில் ஆரியன்கானும் ஒருவர் என்பது பாலிவுட் உலகிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்