Videos | வீடியோக்கள்
சரிந்து கிடக்கும் பாலிவுட்டை தூக்கி நிறுத்த போகும் பதான் பட டீசர்.. விஸ்வரூபம் எடுத்துள்ள ஷாருக்கான்!
பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் சேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் டீசர் ஷாருக்கான் பிறந்த நாளான இன்று வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே பாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லை. அது மட்டுமல்லாமல் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
Also read : ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசரில் ஷாருக்கான் படு மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளும் பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. அதிலும் ரத்த களரியாக இருக்கும் ஷாருக்கான் கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக சண்டையிடும் அந்த காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
மேலும் உச்சகட்ட கவர்ச்சியில் வரும் தீபிகா படுகோன், ஷாருக்கானுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மிரள விட்டுள்ள ஜான் ஆபிரகாம் ஆகியோரின் நடிப்பும் படத்தைப் பற்றிய ஆவலை தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம் இருவருக்கும் இடையே நடக்கும் அந்த சண்டை காட்சி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
Also read : முதல் முறையாக ஜவான் படத்தை பற்றி பேசிய ஷாருக்கான்.. என்ன அட்லி இப்படி சொல்லிட்டாரு?
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்த பதான் நிச்சயம் வசூல் வேட்டையில் சாதனையை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. சரிந்து கிடக்கும் பாலிவுட்டை தூக்கி நிறுத்த விஸ்வரூபம் எடுத்துள்ள ஷாருக்கானின் இந்தப் பதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் ஜனவரி 25ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது. தன்னுடைய பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஷாருக்கான் கொடுத்துள்ள இந்த விஷுவல் ட்ரீட் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.
Also read:மிருகத்தனமாக வெளிவந்த ஷாருக்கான் பட டைட்டில் வீடியோ.. பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த அட்லீ
