ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலத்தில் தோனியின் பெயர் வந்தால் தனது பேண்டை விற்றுக்கு கூட தோனியை விலைக்கு வாங்க தான் தயாராக இருப்பதாக பாலிவுட் பாட்ஷா சாருக் கான் தெரிவித்துள்ளார்.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு  வருடங்களுக்கு தடை செய்யப்பட்டன. சி.எஸ்.கே மீதான தடை இந்த வருடத்தோடு முடிவடையும் நிலையில் அடுத்த தொடரில் சென்னை அணி மீண்டும் களமிறங்கிலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் அடுத்த வருடம் வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் பட்சத்தில் தற்போது புனே அணிக்காக விளையாடி வரும் தோனியை அடுத்த வருடத்திற்கான தொடரில் தங்கள் அணியில் எடுத்து  கொள்ள அனைத்து அணியும் நிச்சயம் போட்டி போடும் சூழல் ஏற்படும்.

இந்நிலையில் தோனியின் பெயர் ஏலத்தில் வரும் பட்சத்தில் தனது பேண்டை விற்று கூட தோனியை தனது அணியில் எடுத்து கொள்ள விரும்புவதாக கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான சாருக் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாருக் கான் கூறுகையில்,’ தோனியின் பெயர் வீரர்கள் ஏலத்தில் இடம் பெற்றிருந்தால், நான் போட்டிருக்கும் பேண்ட்டை விற்கும் நிலை ஏற்பட்டாலும் அவரை நிச்சயம்  எனது அணியில் எடுத்து கொள்வேன்” என்று பேசியுள்ளார்.