வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய டான்சிங் ரோஸ்

கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. கபாலி புகழ் பா.ரஞ்சித் இயக்கியிருந்த இப்படத்தில் ஆர்யா, ஜான் விஜய், பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

படத்திற்கு கிடைக்கும் பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் குறிப்பாக, ஜான் விஜய் மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஷபீர் இப்படத்தில் உடல் மொழியாலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உற்சாகமுடன் அவரது பாக்ஸிங் ஸ்டைலிலேயே நடனமாகியிருக்கிறார்.

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தாங்களும், தங்கள் பங்கிற்கு இந்த பாடலை பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்