Connect with us

Cinemapettai

சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த எம்எல்ஏ மகன்.. கற்பை இழந்த பரிதாபம்

tamilnadu-news

Tamil Nadu | தமிழ் நாடு

சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த எம்எல்ஏ மகன்.. கற்பை இழந்த பரிதாபம்

ஆசை வார்த்தைகளைக் காட்டி பெண்களை ஏமாற்றி அவர்களின் கற்பை சூறையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதிலும் பெரிய இடத்து ஆட்கள்தான் இந்த மாதிரி வேலைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருச்சியை சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தன்னுடைய பெயரை கார்த்திக் ரெட்டி என மாற்றிக்கொண்டு பெங்களூருவில் வணிக வளாகங்களில் பணிபுரியும் இளம்பெண்களுடன் பேச்சு கொடுத்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அவர்களின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு சென்றுள்ளார். தங்களது மானத்திற்கு பயந்து நிறைய பெண்கள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். ஜஹாங்கீர் தன்னை ஒரு எம்எல்ஏவின் மகன் என்றும் தனது தாயார் ஒரு டாக்டர் என்றும், இதனால் சுலபமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வார்த்தையில் மயங்கிய பெண்கள் அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவரோ இதுதான் சமயம் என்று அவர்களின் நகை பணத்தை எல்லாம் சுருட்டி கொண்டு சென்று விடுவார். தற்போது ஒரு பெண் கார்த்திக் ரெட்டி என்பவரின் மேல் தொடர்ந்த வழக்கில் தான் அவர் ஜஹாங்கீர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர் பல பெண்களின் வாழ்க்கையை இதே போல் ஏமாற்றி உள்ளதாகவும் தெரிந்தது. இதனால் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவன்தான் கூப்பிடறானா உங்களுக்கு எங்க போச்சு புத்தி.. ஆசை யாரை விட்டது.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top