வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியா அழைத்துள்ளார் ஒருவர்.

வந்த உடன் அவரை ஒரு பெண்ணிடம் ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுவிட்டார். பின்னர் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளனர்.

இந்த பெண்ணை புனேவில் கடந்த 2015 ஆம் ஆண்டு போலீசார் மீட்டனர். இந்நிலையில் அந்த பெண் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னிடம் ரூ. 10 ஆயிரம் பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும் அதனை மாற்ற உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்நாடு செல்ல தேவையான வேலைகளில் ஈடுபட்டு வந்ததால், அரசு விதித்த காலக்கெடுவிற்குள் தன்னால் பழைய பணத்தை மாற்ற முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உடலை விற்று சம்பாதித்த பணம் தயவு செய்து உதவுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.