பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி தொடங்கி வேலை பார்க்கும் ஆபீஸ் வரை பல தருணக்கங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் மீடியா துறையில் இப்பிரச்சனை மிக மிக அதிகம் தான். சிலர் தான் இந்த சம்பவங்களை எதிர்த்து போராடுகின்றனர். பலர் மூடி மறைத்து ஒதுங்கி விடுகின்றனர்.

Sanusha

சமீபத்தில் தென்னிந்திய நடிகைகளான சனுஷா, அமலாபால் ஆகியோர் பாலியல் தொல்லைக்கு ஆளாகினர். துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சனுஷா, அமலாபால் ஆகியோரின் துணிச்சலுக்கு போலீசும் பாராட்டு தெரிவித்தனர்.

Amala Paul

இந்நிகழ்வுகளுக்கு மஞ்சிமா மோகன் ட்விட்டரில் தன் ஆதரவை முன்பே தெரிவித்தார்.

manjima mohan

இந்நிலையில் தற்பொழுது ஸ்டேட்டஸ் ஒன்றை போட்டார். அதில் ” சில நாட்களுக்கு முன் என் தம்பி, நீ தனியே செல்லும் பொழுது பெப்பர் ஸ்பிரேய எடுத்து போ என்றான். அப்பொழுது நான் நம்பிக்கையுடன் உனக்கு என்ன பைத்தியமா? இன்று பெண்கள் முன்பை விட நல்ல பாதுகாப்பாக உள்ளார்கள் என்றேன்.

manjima mohan twitter

ஆனால் இந்த இரு சம்பவங்களை பற்றி படிக்கும் பொழுது பெப்பர் ஸ்ப்ரே மட்டும் போதாது என்று தோன்றுகிறது ! பெண்களை காமாப் பொருளாக மட்டும் பார்க்கும் நிலை மாற வேண்டும். அவர்களுக்கு உரித்த மரியாதையை கிடைக்க வேண்டும்.” என்று தன் கருத்தை பதிவிட்டார்.

manjima mohan home
manjima mohan

அப்பொழுது உடனே ஒரு ஏடாகூட ஆசாமி பதில் ட்வீட் போட்டார்

” எனது சிறிய அறிவுரை தயவுசெய்து சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். தற்போது கன்னித் தன்மையை காப்பது என்பது திட்டம் போட்டு ஏவுகணை தாக்குதல் நடத்துவதை விட கடினம்’ என்றார்.

அதற்க்கு மஞ்சிமா ” திருமணம் தான் தீர்வா? வாவ் ! இது கன்னித்தன்மை பற்றியது மட்டும் அல்ல. சுயமரியாதையும் என்று ஒன்றும் உள்ளது.”
என குறிப்பிட்டார்.