வயிறு குலுங்க சிரிக்க வச்சுட்டு காணாமல் போன 7 காமெடியன்கள்.. அதல பாதாளத்திற்கு சென்ற மொட்டை ராஜேந்திரன்

பொதுவாகவே சினிமாவில் நடித்து அதிக அளவில் புகழை பெற வேண்டும் என்ற ஆசையில் நுழைந்தவர்கள் தான் அதிகமானோர். அப்படி வந்தவர்களில் சில பேர் காமெடியனாக நடித்து அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் நிலையான நகைச்சுவை நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட சில காமெடி நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சத்யன்: இவர் இளையவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார். இதற்கு அடுத்து கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் சுவலட்சுமிக்கு ஹீரோவாக நடித்தார். ஆனால் இவர் நடித்த இரண்டு படங்களும் பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் ஹீரோவாக நடித்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து அடுத்த படங்களில் காமெடியனாக மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து கோவில், மன்மதன், தேவதை கண்டேன், சந்தோஷ் சுப்பிரமணியன், போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் செய்யும் குறும்புத்தனத்துக்கு ஒரு அளவே கிடையாது. இதனால் ரசிகர் மனதில் காமெடியன் என்ற முத்திரையை பதித்து விட்டார். ஆனாலும் இவரால் நிலையான ஒரு நகைச்சுவை நடிகர் என்று வர முடியாமல் போய்விட்டது.

Also read: படம் தான் ஊத்திக்கிச்சு, பட்டமும் போலியா.. வடிவேலுவை திருப்பி அடிக்கும் கர்மா

தாமு : இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்தே ஒரு நகைச்சுவை கலைஞராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முக்கியமாக இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர். அத்துடன் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அதிக அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து படங்களில் காமெடியனாக நடிப்பதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

சாம்ஸ் : இவர் ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படங்களால் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்பு 2009 ஆம் ஆண்டு பாலைவனச்சோலை என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில் ஐந்து நண்பர்களின் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவே இவருக்கு அதிகபட்ச திருப்தியை கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பயணத்தில், ஒன்பதுல குரு போன்ற படங்களில் நடித்து ஓரளவுக்கு பரீட்சியமானார். ஆனாலும் இது தக்க வைத்துக் கொண்டு இவரால் ஒரு நகைச்சுவை நடிகராக வர முடியாமல் போய்விட்டார்.

Also read: ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து உயிரை விட்ட மயில்சாமி.. கடைசியில் பார்க்க முடியாமல் போன பரிதாப நிலை.!

மொட்டை ராஜேந்திரன்: இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் டபுளாக பணியாற்றி இருக்கிறார். பின்பு பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்து நான் கடவுள் திரைப்படத்தில் ஒரு கொடூர தலைவராக வில்லத்தனத்தை காட்டியிருப்பார். இந்த நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றார். பின்பு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வில்லத்தனமாக நகைச்சுவையை காட்டி இருப்பார். இதைத்தொடர்ந்து இவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்று மக்கள் மனதில் பதித்து விட்டார். ஆனாலும் தொடர்ந்து இவரால் நகைச்சுவை நடிகராக வர முடியாமல் போய்விட்டது.

முனிஷ்காந்த்: இவர் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்பு சூது கவ்வும், நேரம், பீட்சா, முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமானார். இப்பொழுது கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு மாமாவாக நடித்து கொஞ்சம் நகைச்சுவையை கொடுத்திருப்பார். ஆனாலும் பெரிய காமெடி நடிகராக வர முடியவில்லை.

Also read: உங்க பருப்பு இங்க வேகாது.. விவேக், வடிவேலு ரெண்டு பேருக்கும் தண்ணி காட்டிய நடிகர்

பவர் ஸ்டார் சீனிவாசன்: இவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் மூலம் நகைச்சுவையாக நடித்தார். இதில் நகைச்சுவைக்கான அதிக அளவில் இடம்பெற்றதால் அந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சில படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரம் சொல்லும் படியாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் இப்பொழுது காமெடியனாக எந்தப் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

செல்முருகன்: இவர் யூத், படிக்காதவன், சிங்கம், வேலையில்லா பட்டதாரி என பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் நடிகர் விவேக்குக்கு நெருங்கிய நண்பர் மற்றும் மேனேஜராக அவரிடம் பணிபுரிந்தார். அத்துடன் அவருடன் படங்களில் அதிக அளவில் காமெடியாக நடித்தவர். பின்பு விவேக்கின் மரணத்திற்குப் பிறகு இவர் எந்த படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் வருகிறார். இவர் கடைசியாக தாராள பிரபு திரைப்படத்தில் வணங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

Also read: வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்