fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புகழின் உச்சியில் இருந்தாலும், இப்படி ஒரு சோகமா.? கடும் நோயால் அவதிப்பட்டு வரும் சினிமா பிரபலங்கள்

bollywood acters

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புகழின் உச்சியில் இருந்தாலும், இப்படி ஒரு சோகமா.? கடும் நோயால் அவதிப்பட்டு வரும் சினிமா பிரபலங்கள்

உங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்பொழுது உங்களுடன் நிலைகளை பார்த்துக் கொள்வது உங்கள் கடமை இது அன்றாட மக்களுக்கு மட்டுமல்ல திரை பிரபலங்களும் இது பொருந்தும். தற்போது திரைப்பிரபலங்கள் ஒரு சில உடல்நிலை பிரச்சினைகளுக்கு ஆளாகி உள்ளனர். இர்பான் கான் போன்ற பிரபலங்களும் மரணமடைந்துள்ளனர்.

ஷாருக்கான்: பாலிவுட் நடிகரான ஷாருக் கானுக்கு கை மற்றும் முதுகு வலிக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். அதனால் இவர் ரெகுலராக பார்க்கும் மருத்துவரிடம் தற்போது ஆலோசனை கேட்டு வருகிறார்.

அமிதாப் பச்சன்: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு வயது 79 இவர் தற்போது வரை அவருக்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒரு சிறு குறைபாடு உள்ளது. அதாவது தோல் சுருக்கம், எலும்பு மற்றும் நரம்பு தசை குறைபாடு உள்ளது. அதற்காக தற்போது இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹிருத்திக்ரோஷன்: ஹிருத்திக் ரோஷனுக்கு பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு சப்டுரல் ஹீமாடோமா எனும் பாதிப்பு உள்ளது. அதாவது மண்டை ஓட்டின் அடியிலும் மூளையின் மேற்பரப்பிலும் சிறு ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதை தலையில் காயம் ஏற்பட்டால் மட்டுமே வரக்கூடிய நோயாகும் அதற்காக  இவர் அவரது சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனிஷா கொய்ராலா: பாம்பே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. இவர் கமலஹாசனுடன் இந்தியன் படத்திலும் தனுசுடன் மாப்பிள்ளை படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அமெரிக்காவில் பல மருத்துவர்களிடம் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று தற்போது முழு குணம் அடைந்துள்ளார்.

சல்மான் கான்: சல்மான்கானுக்கு முக்கோண நரம்பியல் பிரச்சனை உள்ளது. அதாவது இது ஒருவகையான நரம்பியல் பிரச்சனையாகும். தாடைகள் மற்றும் கண்ணங்களில் இது வலியை அதிகம் ஏற்படுத்தும் தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனாலி: சோனாலிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் இவர் நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனுராக் பாசு: இயக்குனரும் நடிகருமான அனுராக் பாசு லுகேமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இதற்கு சிகிச்சை பெறும் போது ஒரு படத்தை இயக்கி வந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான லுடோ படத்திற்கு நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டு கிடைத்தது.

amithab-bachan

amithab-bachan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top