புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

திரும்புற பக்கமெல்லாம் ஏழரை.. சூர்யா-44 படத்துக்கு வந்த சிக்கல்

சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, காக்கா காக்கா படத்தில் நடிக்கும் வரை சூர்யாவுக்கு நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதேபோல் சிங்கம் 2 படத்திற்குப் பின் சூர்யாவின் நடிப்பில் தியேட்டரில் ரிலீஸான படங்களான, சிங்கம்3, அஞ்சான், காப்பான், எதற்கும் துணிந்தவன் இவை கலவையான விமர்சனங்களையே பெற்றன.

சூரரைப் போற்று ஜெய்பீம் ஆகிய படங்கள் வெற்றி என்றாலும் நேரடியாக தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடியில் ரிலீஸாகின. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசை, ஞானவேல்ராஜா தயாரித்திருந்த நிலையில், இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸானது. ரிலீஸுக்கு முன் புரமோசனில் படக்குழுவினர் ஓவர் பில்டர்ப் விட்டதால், எதிர்பார்ப்போடு போன ரசிகர்கள், இப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட் கொடுத்தனர்.

அதனால் படம் கலவையான விமர்சனங்களும், வசூலில் திணறி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்த்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கங்குவா பட ரிசல்டை பார்த்து, தனக்கு இப்படத்தில் கேங்ஸ்டராக வரும் தனக்கு ஓவர் பில்டப் வேண்டாம் என சூர்யா கேட்டுக் கொண்டதாகவும், இப்படத்தில் கூடுதலாக இப்பட திரைக்கதைக்கு கார்த்திக் சுப்புராஜ் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியானது.

போனால் போகட்டும் – கூலாக இருக்கும் இயக்குனர்

இப்படத்தில் சூர்யா, பீரியாடிக், கேங்ஸ்டர் ஆகிய ரெண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதில், பூஜா ஹெக்டே, ஜோஜீ ஜார்ஜ், ஜெயராம், சுஜித் சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு கல்ட் என பெயரிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இப்பட வேலைகள் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு சிக்கல் எழுந்துள்ளது. நடிகர் அதர்வா தான் இயக்கவிருக்கும் படத்துக்கு கல்ட் என்று பெயரிட்டிருந்த நிலையில், அவர்தான் இத்தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளாராம்.

இதைத்தெரிந்துகொண்டு சூர்யா 44 படக்குழு, அதர்வாவிடம் பேசியுள்ளனர். ஆனால், அவர் அந்த டைட்டிலை தர மறுத்துவிட்டார் என தெரிகிறது. எனவே இதே மாதிரி மற்றொரு டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக தியேட்டரில் படங்களுக்கு கலவையான விமர்சனங்கள், கங்குவா படத்துக்கு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் இதிலேயே உடைந்துபோயிருப்பதாக கூறப்படும் சூர்யாவுக்கு, சூர்யா 44 பட டைட்டில் விவகாரமும் டென்சன் ஏற்படுத்தியுள்ளதாம்.

அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் அனுபவமுள்ள திறமையான இயக்குனர் அந்த டைட்டிலை விட அழகான சூப்பரான டைட்டிலையும் அவர் வைத்துவிடுவார். அந்த டைட்டில் போனால் போகட்டும் என அவர் கூலாக இருப்பதாக கூறப்படுகிறாது.

டைட்டில் பிரச்சனையால் இயக்குனர் டோஸ் விட்ட சூர்யா?

ஆனால், இத்தலைப்பு விவகாரம் மீடியாக்களில் வெளியாகி சர்ச்சையாகும் முன்னர், ஒரு இயக்குனர் முதலிலேயே படத்திற்கான டைட்டிலை ரெடி செய்திருக்க வேண்டும், அல்லது இதுகுறித்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் என இயக்குனருக்கு சூர்யா டோஸ் விட்டதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -

Trending News