Tamil Nadu | தமிழ் நாடு
உயிர் நண்பனை சுமந்த சந்தானம்.. சேதுராமனின் கண்கலங்க வைக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ
நேற்று இரவு 12 மணி அளவில் திடீர் மாரடைப்பினால் நடிகர் மற்றும் டாக்டரான சேதுராமன் உயிரிழந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் சேதுராமன். இந்த நிலையில் அவரது அப்பார்ட்மெண்டில் இருக்கும் நெருங்கிய நடிகர் சதீஷ் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த செய்தியை தெரிவித்தார்.
இதனால் தமிழ் திரையுலகமே கண் கலங்கி நிற்கிறது. அவரது இறுதி சடங்கில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரே சேதுராமனின் இறுதிச் சடங்கில் சுமந்து செல்லும் புகைப்படத்தை பார்த்தால் கண் கலங்க வைக்கிறது.

santhanam-sethuraman
நம்மளை நொடியில் சிரிக்க வைக்கும் சந்தானம் தனது நண்பனை இழந்த சோகம் மிகவும் வருத்தமளிக்கிறது. சில பிரபலங்களால் நேரில் வர முடியாத சூழ்நிலையில் தங்களது இரங்கலை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இவர் சினிமா நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு உதவி செய்துள்ளார் என்பதை இந்த பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால் மக்களை விழிப்புணர்வுடன் இருக்க சொன்ன சேதுராமன் தற்போது நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவரது ஆத்மா சாந்தியடையவதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமாபேட்டையின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
