sethupathi-review

கதை

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.

ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது.

இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.

விமர்சனம் 

முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி. கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது.

தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.

சிறப்பு 

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.

படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.

ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.

ரிசல்ட் :

கெத்து போலீஸ் விஜய்சேதுபதி ! Hit !

ரைடிங் 3.0/5