Sethupathi Movie Stills (16)அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியிருப்பதாகவும் இதில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிப்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.