miruthan-sethupathiகடந்த வாரம் வெளிவந்த 3 படங்களில் சேதுபதி, மிருதன் தான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மா.கா.பா.ஆனந்த் நடித்த நவரச திலகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதில் சேதுபதி, மிருதன் படங்களின் தமிழகத்தின் 3 நாள் வசூல் விவரம் தற்போது வெளிவந்துள்ளது.மிருதன் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

அதேபோல் சேதுபதி 3 நாட்களில் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட், வியாபாரம் வைத்து பார்க்கையில் இவை நல்ல வசூல் தான் என கூறப்படுகின்றது.